கும்பகோணம் எட்டாவது தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பத்து நாள் ஒருங்கிணைந்த தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் 17.11.2025 முதல் 26.11.2025 வரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 500 மாணவர்கள் 9 தேசிய மாணவர் படை அதிகாரிகள் 19 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் நிறைவு விழா கும்பகோணம் எட்டாவது தேசிய மாணவர் படை பிரிவு கமாண்டிங் ஆபிசர் கர்னல் சேது மாதவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் மற்றும் கல்வி புலத்தலைவர் முனைவர் ருக்மாங்கதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் இந்த 10 நாள் முகாமில் மாணவர்களுக்கு ராணுவ சம்பந்தப்பட்ட ட்ரில் மேப்புரீடிங் எதிரி முகங்களை கண்டறியும் விதம் கேன்சர் அவர்னஸ் ஃபயர் ஃபைட்டிங் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அரசு பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை கேர் டேக்கர் ஆபிஸர் முனைவர் ஜோசப் ஆரோக்கியம் மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் செய்தனர்.







