NCC Swatchhata Hi Seva Campaign – 2025

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து இன்று (29.09.2025) “தூய்மை இந்தியா திட்டம் – 2025” (Swachhata Hi Seva Campaign – 2025) நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்வை காவல் ஆய்வாளர் திருமதி. மீனா, சார் ஆய்வாளர் திரு. புகழேந்தி மற்றும் சார் ஆய்வாளர் திரு. சின்னசாமி அவர்கள் துவக்கி வைத்தனர்.

மாணவர்கள் கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையம் வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். “குப்பையற்ற இந்தியா” என்ற இலக்கை முன்னிறுத்திய இந்த முயற்சி, சமூகப் பொறுப்பு உணர்வும் பொதுச் சுகாதாரமும் முக்கியத்துவம் பெறுவதை வலியுறுத்தியது. மகாத்மா காந்தியின் சுத்தம் மற்றும் சேவை குறித்த கொள்கைகளை முன்னிறுத்திய இந்த இயக்கத்தில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

இந்த பணியை தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ஜோசப் ஆரோக்கியம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.