அரசு இன்ஜினியரிங் காலேஜ் நாட்டு நலப்பணி திட்டம் யோகாவில் உலக சாதனை கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் வளாகத்தில் கடந்த 1-2-2020 அன்று யோகா விழிப்புணர்வை முன்நிறுத்தி 3501 மாணவ மாணவியர் ஒன்றிணைந்து இந்திய வரைபடத்தில் வடிவத்திற்கு ஏற்ப எல்லை கூடுகளில் நின்று சூரிய நமஸ்காரம் ஒரு நிமிடம் செய்து உலக சாதனைக்கான முயற்சி செய்தனர் இந்த உலக சாதனை முயற்சியை நிகழ்த்திய தற்காக வேர்ல்ட் ரெக்கார்டு ரிசர்ச் பவுண்டேஷன் பாராட்டி அங்கீகார சான்றிதழ் வழங்கினார் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு எம் ஆனந்தகுமார் மற்றும் உதவிப்பேராசிரியர் திரு ஜி பி சதீஷ்குமார் மற்றும் மாணவ மாணவியரை அரசு இன்ஜினியரிங் காலேஜ் நிறுவனர் திரு ஆர் திருநாவுக்கரசு கல்லூரி முதல்வர் முனைவர் திரு டி பாலமுருகன் துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம் கல்விப்புல தலைவர் முனைவர் எம் ருக்மாங்கதன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.