அன்று இயற்கைக்கான நாள் அந்நாளில் காலை 06.30 மணி முதல் 08.00 மணிவரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு. C..அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.காலை 09.00 மணியளவில நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் எப்படி பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்ற தலைப்பில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.. மதியம் 02.00 மணிக்கு ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் திரு. திரு.D.பாலகுரு செய்தியாளர் அவர்கள் தலைமையில் திரு.M.லெட்சுமிகாந்தன் B.sc.,(AGRI) அவர்கள் சியப்புரை ஆற்ற கிராம பள்ளி மாணவர்கள் பங்குகெற்று பயன்பெற்றனர். நன்றியுரை நாட்டு நலப்பாணி திட்ட மாணவர்களால் நிறைவு செய்யப்பட்டது.மாலை 06.00 மணிக்கு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் இன்றைய விவசாயம் என்ற தலைப்பில் வீதி நாடகம் மற்றும் கணினி மென்பொருள் பயிற்சி அண்ணா நகர் கிராம வாசிகளுக்கு மற்றும் மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்து பயனளிக்கப் பட்டது.