Logo

NSS Event – 19-03-2017

உரிமைகளுக்கான 2ம் நாள்

அன்று உரிமைகளுக்கான நாள் இந்நாளில் காலை ௦6.3௦ மணி முதல் ௦8.௦௦ மணி வரை தியான பயிற்சி கிராம வாசிகளுக்கு திரு. C.அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டது. அன்று காலை 09.00 முதல் சமூக வளர்ச்சியில் இளைஞயர்களின் பங்கு என்ற தலைப்பில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திரு.V.ஜனார்த்தனன் முனைவர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமை தாங்கி திரு. B.நவநீதகிருஷ்ணன் B.A., அரசு பொறியியல் கல்லூரி அவர்களால் சமூக வளர்ச்சி பற்றிய சிறப்புரை நிகழ்ந்தது அதில் பங்குபெற்ற கிராமவாசிகள் அனைவரும் பயன்பெற்றனர். இறுதியில் நன்றியரை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நிறைவுபெற்றது.
அன்று மதியம் 02.00 மணி அளவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் அரசலாறு சுத்தம் செய்தல் மற்றும் நெகிழி நீக்குதல் போன்ற பணிகள் நாட்டு நலப்பணி தீட்ட மாணவர்களால் நிறுவப்பட்டு சிறப்பாக முடிக்கப்பட்டது.அன்று மாலை 06.00 மணிக்கு பெண் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் அழகபுத்துரில்
நன்றாக நடத்தப்பட்டது.