Logo

Events – Tamizh Peraayam Club

தமிழ்ப்பேராய மன்றம் நிகழ்ச்சிகள்:

1. நமது கல்லூரியில் 03-03-2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களால் தமிழ்ப்பேராய மன்றம் தொடங்கப்பட்டு சுமார் 300 மாணவ உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

2. 25-06-2018 அன்று தமிழ்நாடு 50-ஆவது பொன்விழா ஆண்டிற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் நமது கல்லூரியின் தமிழ்ப்பேராய மாணவர்கள் அ.டேனியல் வில்சன், ப. இரா.அபிராகவி மற்றும் ம. ஸ்ரீ.உதயா ஆகியோர் பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப்போட்டி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் வெற்றிப்பெற்றனர்.

3. 25.01.2019 அன்று நமது கல்லூரியின் தமிழ்ப்பேராய மன்றத்தின் சார்பாக தமிழ்க் கலை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டு
சிறந்த முறையில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய மாணர்வர்களுக்கு ராஜ் டிவி புகழ் கலைமாமணி திரு. நாகை. நாகராஜன் இளம் திறமையாளர் விருது வழங்கியதோடு, தமிழ்மொழியின் பெருமைகள் என்ற தலைப்பில்
மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.

4. 15-08-2019 நமது கல்லூயில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அரசு கல்விக்குழுமம் நிறுவனர் தமிழ்த்திரு இரா.திருநாவுக்கரசு அவர்கள் 2018-2019 ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப் பேராய தன்னார்வலர்களுக்கு கேடயம் வழங்கி மாணவர்களை சிறப்பித்தார்.